July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் 45 கொவிட் தொற்றாளர்கள் மரணம்!

இலங்கையில் மேலும் 45 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 15 பெண்களும் 30 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,313 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 650 பேர் இன்று (06) இனங்காணப்பட்டுள்ள நிலையில், நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 267,149 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான 27, 177 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 236,659 ஆக பதிவாகியுள்ளது.