இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவை தமிழ் முற்போக்கு கூட்டணியினர் சந்தித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இன்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் முக்கியஸ்தர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது இந்தியத் தூதுவருடன் துணை தூதுவர் வினோத் ஜேக்கப், அரசியல் செயலாளர் பானு பிரகாஷ் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பில் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தும் மற்றும் தேர்தல் முறை திருத்தம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.