இலங்கையில் பொதுமக்கள் ஒன்றுகூடல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மறு அறிவித்தல் வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள காரணத்தினால் இவை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் ஒன்றுகூடல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் கொரோனா தொற்று பரவுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாகவும், அவை தடை செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டு, அசுகாதார சேவைகள் பணிப்பாளர் புதிய வழிகாட்டல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டல்களுக்கு அமைய ஒன்றுகூடல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மறு அறிவிப்பு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாகவும், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.