July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது!

இலங்கையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 15 சுகாதார தொழிற் சங்கங்கள் முன்னெடுத்து வந்த தொடர் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளன.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடனான கலந்துரையாடலை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு மற்றும் ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (05) காலை முதல் பொது சுகாதார பரிசோதகர் உட்பட சுகாதார சேவையின் 14 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்தன.

இவர்களின் பகிஷ்கரிப்பு காரணமாக கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் உட்பட பல சேவைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் சிரமத்தை எதிர் கொண்டிருந்தனர்.

அத்துடன், வைத்தியசாலைகளில் மட்டுப்படுத்தப்பட்ட சிகிச்சைகளே வழங்கப்படுவதாகவும் சில வைத்தியசாலைகளில் வெளி நோயாளர் பிரிவுகளுக்கு செல்லும் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் பொதுமக்கள் விசனம் வெளியிட்டிருந்தனர்.