இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தைப் பலப்படுத்தி, அதன் செயற்பாடுகளைத் தொடர தாம் தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஒன்று தொடர்பில் உரையாற்றும் போதே, நீதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தைப் பலப்படுத்துவதன் மூலம் காணாமல் போனோர் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணாமல் போனதாகக் கூறப்படும் உறவுகள் இறந்திருந்ததால், மரண சான்றிதழ் வழங்குவது தொடர்பாகவும், அவர்கள் யுத்தத்தில் இறந்திருந்தால் நஷ்டஈடு வழங்குவது தொடர்பாகவும் கவனம் எடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலக உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை சீர்திருத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் தவறான பிரசாரங்களை மேற்கொள்பர்களுக்கு பதிலளிக்கும் வகையில், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை பலப்படுத்த உள்ளதாகவும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.