January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கண்டி தேசிய வைத்தியசாலையில் சிற்றூழியர் பணிகளை மேற்கொள்ளும் இராணுவம்!

கண்டி தேசிய வைத்தியசாலையில், சிற்றூழியர்கள் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், அவர்களின் பணிகளை மேற்கொள்ள இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நோயாளிகளை கொண்டு செல்வது, கோப்புகளை எடுத்துச் செல்வது, சுத்தம் செய்வது உள்ளிட்ட களின் அனைத்து கடமைகளையும் இராணுவ அதிகாரிகள் கவனித்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

25 இராணுவத்தினர் இவ்வாறு பணிகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சிற்றூழியர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 15 சுகாதார தொழிற்சங்கங்கள் தொடர் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

நேற்று (05) காலை முதல் அவர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், நேற்று மாலை அதிகாரிகளுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

எனினும் அந்தப் பேச்சுவார்த்தையில் தமது கோரிக்கைகளுக்கு தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.