February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை தேர்தல் ஆணைக்குழு மக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்!

2021 தேர்தல் பதிவேட்டில் தமது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை தமது பகுதிக்கு பொறுப்பான கிராம சேவகரை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை தேர்தல் ஆணைக்குழு நாட்டு மக்களை  கேட்டுக் கொண்டுள்ளது.

கிராம சேவகரை தொடர்பு கொள்வதன் மூலமாக தமது பெயரை சரி பார்ப்பதோடு, குடியிருக்கும் பிரதேசங்கள் குறித்த மாற்றங்களையும் மேற்கொள்ள முடியும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், தேர்தல் ஆணைக்குழுவின் இணையத் தளத்தை பார்வையிடுவதன் மூலம் தமது பெயர் 2021 ஆம் ஆண்டுக்கான தேர்தல் பதிவேட்டில் உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் எனவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.