
இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற 29 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் மூவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (06) அதிகாலை யாழ்.– கோவிலம் கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது நான்கு சாக்குகளில் இருந்து குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பூநகரி மற்றும் கரைச்சி ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடத்தலுக்கு பயன்படுத்திய மீன்பிடிப் படகும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.