மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறைச்சாலை கைதிகள் 72 பேர் உட்பட மாவட்டத்தில் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா. மயூரன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், நேற்றைய தினம் (05) கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆரையம்பதியைச் சேர்ந்த ஒருவரும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மாவட்டத்தில் தொடர்ந்து எழுமாறாக அன்டிஜன் மற்றும் பி.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதேவேளை, நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பி.சீ.ஆர் பரிசோதனையில் மட்டக்களப்பு சிறைக் கைதிகள் 72 பேருக்கும், பொலிஸார் இருவருக்கும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி, காத்தான்குடி ஆகிய இரு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் உட்பட மூன்று பேரும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேருக்கும் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் உட்பட 116 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் நா. மயூரன் தெரிவித்துள்ளார்.