July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பசிலுக்காக பதவி விலகினார் ஜயந்த கெட்டகொட

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்குரிய கடிதத்தை பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார்.

பசில் ராஜபக்‌ஷ பாராளுமன்றம் வருவதற்காகவே ஜயந்த கெட்டகொட பதவி விலகியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்‌ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பசில் ராஜபக்‌ஷவுக்காக பாராளுமன்ற தேசிய பட்டியல் ஆசனத்தை இராஜினாமா செய்பவருக்கு, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் பதவி வழங்கப்படவுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.