
நாட்டை விரைவாக திறக்காமல் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி வழங்குவதை வேகமாக மேற்கொண்டால், செப்டம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாகத் திறக்க முடியும் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த மாதம் இலங்கைக்கு ஒன்பது மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் சலுகைகளை வழங்கும் விரிவான திட்டமொன்றை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.