July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி; மேலும் 32 மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்று (04) மேலும் 32 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

30 வயதுக்கு மேற்பட்ட 14 பெண்களும் 18 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,268 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 581 பேர் இன்று (05) இனங் காணப்பட்டுள்ளனர்.

அண்மைய காலத்தில் நாட்டில் பதிவான குறைந்த தொற்றாளர் எண்ணிக்கை இதுவாகும்.

இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 66 ஆயிரத்து 211 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 28,046 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தோடு நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 2 இலட்சத்து 24 ஆயிரத்து 942 ஆக உயர்வடைந்துள்ளது.