
இணைய வழி மூலம் கல்வியை தொடர்வதில் சிரமங்களை எதிர் கொண்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தீர்வாக, நாடளாவிய ரீதியில் இணைய வசதிகளுடன் கூடிய 2,096 வள மையங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஆதரவுடன் 2,096 வள மையங்களை திறக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளதாக மதுகமை -தொடாங்கொடையில் ஆரம்ப பாடசாலை ஒன்றில் வள மையம் ஒன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
ஒவ்வொரு வள மையத்திலும் கணினிகள், தாவல்கள், இணைய வசதிகள் மற்றும் ஒன்லைன் கல்வியை நடத்துவது தொடர்பான உபகரணங்கள் உள்ளன.
இணைய தொடர்பை பெற்றுக் கொள்வது மற்றும் தொலைபேசி வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதில் சிக்கலை எதிர்கொண்டுள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், குறிப்பாக தொலைதூர கிராமங்களில் கல்விக்கு சமமான அணுகல் வழங்கப்பட வேண்டும்.
ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக இது எங்கள் முதன்மை பொறுப்பாக கருதப்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதன் போது தெரிவித்தார்.