ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்த்தலமான வெஸ்ட் மினிஸ்டர் ஹவுஸில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்கும் அண்மைய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடியதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய நல்லிணக்க முயற்சிகளுக்கு பிரிட்டன் ஆதரவு வழங்கும் என்றும் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.
Useful meeting with @Rauff_Hakeem to discuss recent measures affecting the Muslim community. The #UK is keen to support #SriLanka towards inclusive governance, the rule of law, and social cohesion for all communities. pic.twitter.com/trkqTYqeCK
— Sarah Hulton OBE (@SarahHultonFCDO) July 5, 2021