July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அஸ்ட்ரா செனெகா’ தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு முக்கிய செய்தி

கொழும்பில் “அஸ்ட்ரா செனெகா” தடுப்பூசியின் 1 வது டோஸை பெற்றுக் கொண்டவர்களுக்கு 2 வது டோஸாக ‘பைசர்’ தடுப்பூசிகளை வழங்க சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து இன்று (5) காலை இலங்கை வந்தடைந்த 26,000 ‘பைசர்’ தடுப்பூசிகளே இவ்வாறு வழங்கப்பட உள்ளன.

குறிப்பாக “அஸ்ட்ரா செனெகா”வின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் “அஸ்ட்ரா செனெகா” தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுக் கொண்ட 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் 2 வது டோஸ் தடுப்பூசிக்காக நீண்டகாலமாக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பைசர் தடுப்பூசி தெற்காசிய பிராந்தியத்தில் முதலாவதாக இலங்கைக்கே கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவாக்ஸ் திட்டத்தின் மூலம் “பைசர்” தடுப்பூசி ஏற்கனவே தெற்காசிய நாடான மாலைதீவுக்கு வழங்கப்பட்டுள்ளது.