July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பஸிலுக்கும் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் விரைவில் பேச்சுவார்த்தை

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்‌ஷவிற்கும், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக நீர் வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணிக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. அந்த முரண்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

கூட்டணியின் பங்காளிக் கட்சி தலைவர்கள் வசமுள்ள பதவிகள் திட்டமிட்ட வகையில் பறிக்கப்படுகின்றன. கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவின் அமைச்சின் கீழிருந்த உர நிறுவனம் எந்தவொரு காரணமுமின்றி விவசாயத்துறை அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

கூட்டணி அமைத்துள்ளோம் என்பதற்காக தவறை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களின் தன்னிச்சையான செயற்பாடுகள் பங்காளிக் கட்சிகளை புறக்கணிக்கும் வகையில் காணப்படுகிறது.

அத்துடன், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் செயற்பட்ட விதம் அடிப்படையற்றது எனவும் அவர் தெரிவித்தார்.