July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

1600 நாட்களை எட்டியுள்ள வவுனியா போராட்டம்!

காணாமல் போனோரின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் 1600 நாட்களை எட்டியுள்ளது.

இதன்படி அவர்களால் போராட்டம் நடத்தப்படும் இடத்திற்கு முன்னால் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றின் கொடிகளை ஏந்தியிருந்ததுடன், காணாமல் போன உறவுகளுக்கு சர்வதேசம் நீதியை பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதன் போது அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளான நாங்கள், பொறுப்பு மற்றும் நீதியைக் காண கடந்த 1600 நாட்களாக,ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு என்று தொடர்ந்து போராடி வருகிறோம் என்று கூறினர்.

இந்நிலையில் தற்போது நாட்டுக்குள் வந்துள்ள சீனா, ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் தமிழர்களுக்கான நீதியை எதிர்ப்பதாகவும் இதனால் சீனாவை தமது நிலைத்தை விட்டு வெளியேறுமாறு கேட்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

This slideshow requires JavaScript.

எவ்வாறாயினும் மனித உரிமைகளிள் அக்கறை கொண்ட அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இலங்கையில் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்த தாமதிக்காமல் செயல்ப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.