பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் மனுவைப் பரிசீலனைக்கு உட்படுத்துவதில் இருந்து நான்காவது நீதியரசரும் விலகிக்கொண்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தான் அநீயாயமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுவை பரிசீலனைக்கு உட்படுத்தும் நீதியரசர் குழாத்தில் இருந்து தான் விலகிக்கொள்வதாக நீதியரசர் மகிந்த சமயவர்தன அறிவித்துள்ளார்.
ரிஷாட் பதியுதீனின் மனுவை பரிசீலனைக்கு உட்படுத்துவதில் இருந்து விலகிக்கொண்ட நான்காவது நீதியரசர் அவராவார்.
இதற்கு முன்னர் நீதியரசர்களான யசன்த கோடாகொட, ஜானக டீ சில்வா மற்றும் ஏ.எச்.எம்.டீ. நவாஸ் ஆகியோர் விலகிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், மனு மீண்டும் 8 ஆம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.