January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அமெரிக்காவுடனான நீண்ட கால நட்புறவைத் தொடருவோம்’: ஜனாதிபதி கோட்டாபய

அமெரிக்காவுடனான நீண்ட கால நட்புறவைத் தொடருவோம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடனான ஒத்துழைப்புகளை விரிவுபடுத்திக்கொள்ளவும், நம்பிக்கையுடன் முன்னோக்கிப் பயனிக்கவும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மாநிலங்கள் 1776 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதை முன்னிட்டு, அமெரிக்க சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.