January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

13 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று முதல் தொடர் பணி பகிஷ்கரிப்பு

இலங்கையில் 13 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று முதல் தொடர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சுகாதார தொழிற்சங்கங்கள் அடையாள பணி பகிஷ்கரிப்புகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது தொடர் பணி பகிஷ்கரிப்பை அறிவித்துள்ளன.

தாம் நேற்று வரை கால அவகாசம் வழங்கியிருந்தும் தமது கோரிக்கைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுத் தரத் தவறியதாக ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த பணி பகிஷ்கரிப்புகளால் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் முடியாத நிலை ஏற்படும் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேநேரம், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாத போது, பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக அம்புலன்ஸ் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார தொழிற்சங்கங்களின் பணி பகிஷ்கரிப்பு மக்களை கஷ்டத்தில் தள்ளுவதாகும் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.