அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்துக்கொண்டு அரசாங்கத்தை குழப்பும் நடவடிக்கைகளை ஒரு சிலர் முன்னெடுத்து வருகின்றனர் என்று இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறானவர்களுக்கு அரசாங்கத்தில் இருந்து தாரளமாக வெளியேற முடியும் என்றும் அவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது ஸ்ரீலங்கா சுதந்த கட்சியின் உறுப்பினர்கள் முன்வைக்கும் கருத்துக்களை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்களின் செயற்பாடுகளை கவனித்தால் வேறு ஒரு வேலைத்திட்டத்தில் இயங்கிக்கொண்டிருப்பது போன்று தெரிகின்றது, ஆகவே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பலவீனப்படுத்தும் செயற்பாடுகளுக்கு நாம் இடமளிக்க மாட்டோம் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பஸில் ராஜபக்ஷ பாராளுமன்ற வருவதும், அவருக்கான பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டுக்கொடுப்பதும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தனிப்பட்ட தீர்மானமாகும் என்று குறிப்பிட்டுள்ள செஹான் சேமசிங்க, இதில் ஏனைய கட்சியினர் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
பஸில் பாராளுமன்றம் வருவது கூட்டணிக்கட்சிகளுக்கு பிரச்சினை என்றால் அவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேற முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.