
அமெரிக்காவில் இருந்து 26,000 ‘பைசர்’ தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன.
இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் இவை கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
2 இலட்சம் பைசர் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் முதல் தொகுதியாக இந்த 26,000 தடுப்பூசிகள் இலங்கை வந்துள்ளன.
இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த தடுப்பூசி தொகை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் இவற்றை மக்களுக்கு வழங்க நடவடிக்கையெடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பைசர் தடுப்பூசி தெற்காசிய பிராந்தியத்தில் முதலாவதாக இலங்கைக்கே கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.