January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கட்சி தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் செயற்பாடுகளில் ஓரணியில் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்று இன்று (04) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும்,சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், என்.சிறிகாந்தா, அனந்தி சசிதரன்,பொ.ஐங்கரநேசன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.