நாட்டில் ஆடம்பர பொருட்களின் இறக்குமதியை தடை செய்ய எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
கைத் தொலைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்களும் வாசனை திரவியங்கள் போன்றனவும் இறக்குமதி செய்வதை தடுக்க எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
டொலர் இருப்புகளை உறுதிப்படுத்தும் மற்றொரு நடவடிக்கையாக நாட்டில் ஆடம்பர பொருட்களின் இறக்குமதியை தடை செய்ய அல்லது கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்தே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய ஆடம்பர பொருட்களின் பட்டியலை மத்திய வங்கி ஏற்கனவே தொகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து நாளை (05) திங்கட்கிழமை நடைபெறும் விசேட ஊடக சந்திப்பில் இது குறித்து மேலும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.