நாட்டிலுள்ள அனைத்து இராணுவ மருத்துவ மனைகளிலும் நாளை (05) கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக கொரோனா பரவுவதை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறினார்.
அதன்படி, மேல் மாகாணத்தின் நாரஹேன்பிட்ட, வேரஹெர, பனாகொட மற்றும் வெலிசறை இராணுவ மருத்துவ மனைகளில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை (05) காலை 8:30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தடுப்பூசி வழங்கப்படும் என்று இராணுவத் தளபதி தெரிவித்தார்.
இதனிடையே, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, தியத்தலாவ, அநுராதபுரம், காட்டுநாயக்க, காலி கோட்டை மற்றும் மாத்தறை நில்வலா உள்ளிட்ட இராணுவ முகாம்களில் இன்றைய (04) தினம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனவே, கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை வேகப்படுத்தும் நோக்கில் நாளைய தினம் மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு யார் வேண்டுமானாலும் வந்து தடுப்பூசி போடலாம் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.