இலங்கையில் தற்போது பரவி வருகின்ற கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் ஒரு மாதத்துக்கு தாக்கம் செலுத்தும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரட்ன தெரிவித்தார்.
அத்துடன், தற்போதுள்ள பயண கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த கட்டத்தில் நாம் ஒரு சாதாரண சூழ்நிலையை காண்கிறோம். ஏனெனில் மூன்று வாரங்களுக்கு முன்பு நாடு முழுவதும் பயண கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டதுடன், இறப்பு விகிதமும் குறைந்து விட்டது.
எனவே, தற்போது பரவி வருகின்ற தொற்று நோயின் முடிவுகளை காண இன்னும் ஒரு மாதம் தேவைப்படும்.
அந்த நேரத்தில் நம்மால் கொரோனாவை கட்டுப்படுத்துவது சற்று கடினமாக இருக்கும். ஆனால் எமது அலட்சியம் காரணமாக, இந்த நோய் இலங்கை முழுவதும் வேகமாக பரவி வருகிறது என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, கொழும்பு உள்ளிட்ட ஒரு சில வெளிப்புற மாவட்டங்களில் 18 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.