May 24, 2025 10:45:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். புன்னாலைக்கட்டுவனில் முதியவர் மீது வாள்வெட்டு

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் முதியவர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

புன்னாலைக்கட்டுவன் வடக்குப் பகுதியில் இன்று மாலை நடந்த இந்த சம்பவத்தில் காயமடைந்த 62 வயதான முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த முதியவரின் வீட்டுக்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்ற நான்கு பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுன்னாகம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.