January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடத்தல் சம்பவமொன்று தொடர்பில் இராணுவத்தை சேர்ந்த நால்வர் கைது!

நபரொருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவமொன்று தொடர்பில் இராணுவத்தை சேர்ந்த நால்வர் நுரைச்சோலை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் இராணுவ கெப்டன் ஒருவரும், கோப்ரல் ஒருவரும் மற்றும் லான்ஸ் கோப்ரல் இருவரும் அடங்குவதாகவும் இவர்கள் கல்லாறு இராணுவ முகாமை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்னர் குறித்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனிப்பட்ட தகராறு தொடர்பாக நபரொருவரின் தூண்டுதலின் பேரில் அந்தப் பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரை கடத்திச் சென்று அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.