
மட்டக்களப்பு – கரடியனாறு, குடாவெட்டை வயல் பிரதேசத்தில் மாடு மேய்க்கச் சென்ற ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சித்தாண்டி பிரதேசத்தைச் 57 வயதுடைய கந்தன் நாகராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை மாடு மேய்ப்பதற்காக சென்றவர் மாலையாகியதும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் தேடுதலில் ஈடுபட்டபொழுது உயிரிழந்த நிலையில் அவரின் சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியே இவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த சடலம் பிரோத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.