சீனாவில் இருந்து மேலும் ஒரு மில்லியன் டோஸ் ‘சினோபார்ம்’ தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்துள்ளன.
சீனாவின் பீஜிங்கில் இருந்து இன்று அதிகாலை இவை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசிகள் இரண்டாவது டோஸாக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட நான்காம் கட்ட தடுப்பூசி தொகை இதுவாகும்.
இலங்கையில் இதுவரையில் 2,916,330 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும் 1,206,499 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.