யாழ்ப்பாணம்,பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் எழுமாறாக 100 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளில் ஆறு பேருக்கு கொவிட்-19 நோய்த் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன்,மந்திகை பகுதியில் 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறை நகரில் எழுமாறாக 100 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவர்களில் 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
6 பேரில் ஐவர் பருத்தித்துறை கடற்கரை வீதியில் வசிப்பவர்கள். ஒருவர் பருத்தித்துறை நகர் பகுதியில் வசிப்பவர்.
அத்துடன் மந்திகையில் பெறப்பட்ட மாதிரிகளில் வர்த்தகர்கள் மூவர், வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இருவர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் என ஆறு பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.