January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸினை பெற்றவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

கொழும்பு மாவட்டத்தில் சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸினை பெற்றுக் கொண்ட அனைவரும் அதன் இரண்டாவது டோஸை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் கொவிட் தடுப்பூசி மத்திய நிலையத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்ற தடுப்பூசி வேலைத்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கான சினோபார்ம் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டமும் ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு அருகில் சாந்த லூகஸ் தேவாலய வளாகத்தில் இடம்பெறுகிறது.

இங்கு 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கான சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ்கள் பெற்றுக் கொடுக்கப்படும் நிலையில்,வைத்தியசாலை இணையத்தளத்தில் பதிவு செய்த பின்னர் வரிசைப்படி குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.