
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தை தனது 61 ஆவது வயதில் காலமானார்.
சில நாட்களாக கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (03)காலமானார்.
கமல் ரத்வத்தை முன்னர் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் துணைத் தலைவராக பணியாற்றினார்.
கமல் ரத்வத்தை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கிளிஃபோர்ட் ரத்வத்தையின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.