July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் தினசரி கொவிட் தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

இலங்கையில் (03) இன்று 1,251 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் -19 கட்டுப்பாட்டு பணிக்குழுவின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்று நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 264,046 ஆக அதிகரித்துள்ளது.

நீண்ட நாட்களாக நாட்டில் 1500 க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வந்த நிலையில், இன்று பதிவான தினசரி கொவிட் தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, 29,461 கொரோனா தொற்றாளர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு, இன்று (03 )மேலும் 1,853 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 231,394 ஆக உயர்வடைந்துள்ளது.