July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் ஆடம்பர பொருட்களின் இறக்குமதியை தடை செய்வது குறித்து அரசாங்கம் ஆராய்வு

நாட்டில் ஆடம்பர பொருட்களின் இறக்குமதியை தடை செய்ய அல்லது இறக்குமதி செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக மத்திய வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது  ஏற்பட்டுள்ள டொலர் இருப்புக்களை உறுதிப்படுத்தும் மற்றொரு நடவடிக்கையாக இந்த தடை அமுல்படுத்தப்பட உள்ளது.

அறிக்கையின்படி, வீட்டு உபகரணங்கள், மொபைல் போன்கள் மற்றும் வாசனை திரவியங்கள் போன்ற பல அத்தியாவசிய பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் திகதி மற்றும் காலம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

கட்டுப்படுத்தப்பட வேண்டிய ஆடம்பர பொருட்களின் பட்டியலை மத்திய வங்கி ஏற்கனவே தொகுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து மேலும் விவாதிக்கப்பட உள்ளது.

இதற்கிடையில், நாட்டில் வாகன இறக்குமதி தடையை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டியிருக்கும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.