May 29, 2025 10:49:47

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்- அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹோலி சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹோலி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

கடுமையான பேரழிவாக மாறியுள்ள கொரோனா அச்சுறுத்தல் உட்பட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்திற்கு தேவையான ஆதரவை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் அபிவிருத்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியால் செயற்படுத்தப்பபட்டு வரும் ‘எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு’ திட்டத்திற்கும் ஆதரவு வழங்குவதாக அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் உறுதியளித்துள்ளார்.