January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய மூன்று இலங்கையர்கள் இந்தியாவில் கைது!

சர்வதேச போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 3 இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக எக்ஸ்பிரஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

கேரளாவில் அங்கமாலி பகுதியில் வைத்து தமிழ்நாடு தீவிரவாத ஒழிப்பு பிரிவினரால் குறித்த நபர்கள் இன்று (03)கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போலி கடவுச் சீட்டுடன்  கிடங்கூரில் ஆக்ஸிலியம் கல்வியியல் கல்லூரிக்கு அருகே ஒரு வாடகை வீட்டில் குறித்த மூவரும் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கிடங்கூரில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்ற இருவர் அதானியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக எக்ஸ்பிரஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

இந்த மூவரும் தமிழகத்தில் பதிவான பிற குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.