(Photo: Air France/Twitter)
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்-சார்லஸ் டி கோல்லில் இருந்து கொழும்புக்கான விமான சேவைகளை ஏர் பிரான்ஸ் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் குளிர்காலத்தை ஒட்டி இவ்வாறு விமான சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
ஏர் பிரான்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களுக்கு புதிய சேவைகளை வழங்கவுள்ளது.
இதன் ஒரு பகுதியாக மாலைதீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.
ஒக்டோபர் 2021 முதல் மார்ச் 2022 வரை பிரான்ஸில் குளிர்காலம் நிலவும் நிலையில், பிரான்ஸ் பிரஜைகள் உலகின் பல இடங்களுக்கு விடுமுறையை களிப்பதற்காக செல்கின்றனர்.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த உலக நாடுகளுக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன.