January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச நாணய பரிவர்த்தனையை ஊக்குவிக்க கொழும்பு பங்குச் சந்தை மற்றும் போர்ட் சிட்டி ஒப்பந்தம்

சர்வதேச பன்னாட்டு நாணய பரிவத்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் கொழும்பு பங்குச் சந்தை மற்றும் கொழும்பு போர்ட் சிட்டி ஆகியன புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.

கொழும்பு பங்குச் சந்தையின் தலைவர் துமித் பெர்னாண்டோ மற்றும் கொழும்பு போர்ட் சிட்டியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் துல்சி அலுவிஹாரே ஆகியோருக்கு இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கையின் எல்லைகளுக்குள் பிராந்திய ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நிதிப் பரிமாற்றங்களை மேற்கொள்வது இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்று போர்ட் சிட்டி தெரிவித்துள்ளது.

நாட்டின் மூலதன சந்தைகளை மேம்படுத்துவதில் கொழும்பு போர்ட் சிட்டி முக்கிய பங்காற்றும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

This slideshow requires JavaScript.