February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விடுதலைப் புலிகளை ஊக்குவித்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் திருகோணமலையில் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் முகப்புத்தகத்தில் கருத்து பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவர் திருகோணமலை பொலிஸ் குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான 24 வயது இளைஞனே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் விடுதலை புலிகள் இயக்கம் மற்றும் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் பேஸ்புக் குழுக்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் வழியாக  கருத்துக்களைப் பதிவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் இன்றைய தினம் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த இளைஞன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்  பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.