October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் வருவதற்கு தடை

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம்- நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் வருவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு ஆலய அறங்காவலர் சபையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் மட்டுமே நித்திய பூஜைகள் இடம்பெறுகின்றன.

அதற்கமைய பக்தர்களின் நேர்த்திகள், அபிஷேகங்கள் என்பன தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், அவை மீள ஆரம்பிக்கும் போது அடியவர்களுக்கு அது தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் ஆலய நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

அதனால் தற்போதைய கொரோனா நிலைமைகளை கருத்தில் கொண்டு ஆலயத்திற்கு வருகை தருவதனை தவிர்த்து வீடுகளில் இருந்தவாறு பிரார்த்தனையில் ஈடுபடுமாறு ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதேவேளை,தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று சூழ்நிலை காரணமாக நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.