January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் சிலருக்கு இடமாற்றம்

இலங்கையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மூவருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வட மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்க, பொலிஸ் பரிபாலன சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

குற்றவியல் மற்றும் போக்குவரத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்த எல்.எஸ்.பதிநாயக, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

வட மாகாணத்துக்குப் பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பி.பி.எஸ்.எம்.தர்மரத்ன, வட மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வட மத்திய மாகாணத்துக்கான பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகவும் பி.பி.எஸ்.எம்.தர்மரத்ன செயற்படவுள்ளார்.

வட மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக டபில்யு.கே. ஜயலத் நியமிக்கப்பட்டுள்ளார்.

சபரகமுவ மாகாணத்துக்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக ஆர்.எல். கொடிதுவத்து நியமிக்கப்பட்டுள்ளதோடு, அவர் ஊவா மாகாணத்துக்கான பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகவும் செயற்படவுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக செயற்படும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, குற்றவியல் மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.