May 29, 2025 20:08:18

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காலி ஊரகஸ்மங்ஹன்திய பகுதி துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!

காலி, ஊரகஸ்மங்ஹன்திய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஊரகஸ்மங்ஹன்திய தேவத்த பகுதியில் வீட்டில் இருந்த ஒருவர் மீதே துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் தெரியாதவர்களால் இந்த கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், துப்பாக்கி சூடு மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊரகஸ்மங்ஹன்திய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.