January 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மூன்று மாவட்டங்களில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

இலங்கையின் மூன்று மாவட்டங்களில் மேலும் சில பிரதேசங்களை தனிமைப்படுத்த கொரோனா தடுப்பு தேசிய செயலணி நடவடிக்கை எடுத்துள்ளது.

முல்லைத்தீவு, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில பகுதிகளில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்தே, இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை கிழக்கு கிராம சேவகர் பிரிவின் நாயாறு மீன்பிடி பிரதேசம் இன்று காலை 6 மணி முதல் முடக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், கேகாலை மாவட்டத்தின் மிகிபிடிய கிராம சேவகர் பிரிவின் மாதெய்யாவ கிராமம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதேசம் ஆகியனவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.