November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘டெல்டா பிளஸ் எ.வை 1 வைரஸ் இலங்கை உட்பட 90 நாடுகளில் பரவியுள்ளது’

டெல்டா பிளஸ் எ.வை 1 என்ற திரிபுபட்ட வைரஸானது தற்போது 90 நாடுகளில் பரவியுள்ளதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையும் இந்த பட்டியலில் உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட அதேபோல் மிகவும் வேகமாக தொற்றக்கூடிய இந்த வைரஸ் நிச்சயமாக இலங்கையில் பல்வேறு பகுதிகளுக்கு கடத்தப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இது குறித்த ஆய்வுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். இதுவரை முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் ஒரு சில பகுதிகளில் எழுமாறாக செய்த பி.சி.ஆர் பரிசோதனைகளில் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேபோல், கடந்த ஒரு வாரகாலத்தில் நாட்டில் கொவிட் வைரஸ் தொற்றாளர் அதிகரித்துள்ளதாகவும் எமக்கு சில தரவுகள் மூலமாக கிடைக்கப் பெற்றுள்ளன.

எனவே நிலைமை மோசமானதாகவே உள்ளது. மக்களின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்படாவிட்டால்  நிச்சயமாக அடுத்த ஒரு மாதத்தில் அல்லது இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் நாட்டில் பாரிய தாக்கமொன்று ஏற்படும் என்றார்.