இலங்கையில் கொரோனா அச்சம் காரணமாக அனைத்து மிருக்காட்சிசாலைகளும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தேசிய உயிரியல் பூங்கா திணைக்களத்தின் கீழுள்ள தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம், பின்னவல மிருகக்காட்சி சாலை என்பனவும் மூடப்படவுள்ளன.
எனினும், சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக மக்கள் தேசிய பூங்காக்களுக்கு செல்வதில் தடை இல்லை என அமைச்சர் தெரிவித்தார்.