யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மேலும் 50,000 ‘சினோபார்ம்’ கொவிட்-19 தடுப்பூசிகள் நாளை கிடைக்கப்பெறவுள்ளதாக பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்று அதிகமுள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இடம்பெற்றுவரும் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் நிறைவடைந்தவுடன் மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகளை வழங்கும் பணிகள் ஆரம்பமாகும் என்றும், தடுப்பூசி வழங்கும் மையங்கள் தொடர்பில் அதிகாரிகள் விரைவில் அறிவிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அடுத்த கட்ட தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும், யாழ் மாவட்ட மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையிலும் உரிய தரப்பினருடன் தொடர்ச்சியாக கலந்துரையாடி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.