
இலங்கை முழுவதும் அமுலாகும் வகையில் கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான புதிய சுகாதார ஒழுங்குவிதிகள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்றை சுகாதார அமைச்சு வெளியிடவுள்ளது.
மே 21 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு ஜுன் 21 ஆம் திகதி தளர்த்தப்பட்டது.
இதனை தொடர்ந்து மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார ஒழுங்குவிதிகள் அடங்கிய சுற்றறிக்கையை சுகாதார அமைச்சு வெளியிட்டதுடன் அது ஜுலை 5 ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நஜலையில் தற்போதைய கொவிட் நிலைமைகள் தொடர்பாக மீளாய்வு செய்து 5 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் புதிய ஒழுங்குவிதிகள் அடங்கிய சுற்றறிக்கையை வெளியிட உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதனை தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.