July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன

சீனாவில் இருந்து​மேலும் ஒரு மில்லியன் டோஸ் ‘சினோபார்ம்’ தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்துள்ளன.

சீனாவின் பீஜிங்கில் இருந்து இன்று அதிகாலை இவை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இவை விசேட வாகனம் மூலம் கொழும்பிலுள்ள மத்திய தடுப்பூசி களஞ்சியத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள முதல் தொகுதி ‘பைசர்’ தடுப்பூசிகள் எதிர்வரும் திங்கட் கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.