
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளுக்கு செல்ல தனது நாட்டு பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் தற்காலிக தடை விதித்துள்ளது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், தென்னாப்பிரிக்கா, வியட்நாம் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஐக்கிய அரபு இராச்சியம் தனது பிரஜைகளுக்கு அறிவித்துள்ளது.
இதேவேளை குறித்த நாடுகளில் இருந்து பயணிகள் தமது நாட்டுக்கு வருவதற்கு தடை விதிக்கவும் ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகள் நடவடிக்கையெடுத்துள்ளனர்.
இதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து தமது நாட்டுக்கு பயணிகள் வருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.